Thursday, March 7, 2013

மன்னிக்கவும்.

நான் வேற என்னவோ பண்ணிக்ட்டு இருக்றப்ப, வேறு ஒருவரின் பதிவு எனது தளத்தில் வெளியாகிவிட்டது. அழித்து விட்டேன் ஆனால் RSS/Emailல் பதிவுகளை பெறுபவர்களை அது சென்று சேர்ந்திருக்கும். இடையூறுக்கு மன்னிக்கவும் ...! 

 

# ஆமா எத்தன பேர் RSS/Emailல என் பதிவெல்லாம் படிக்றீங்க????

Wednesday, February 27, 2013

ஒரு இடத்தை
சுத்த படுத்தி விட்டு
அவன் அமரட்டுமென
தள்ளி அமர்கிறாள் அவள்!!
யாராக
வேண்டுமானாலும்
மாறிவிடுகிறது
தலையணை!
நகம் கடிக்கும் பெண்ணின்
கால் விரல் நகம்!
கடந்து செல்லும் பக்கங்களில்
சிலவற்றை
மடித்து வைக்கிறோம்....
அழைப்பு மணி அடித்துவிட்டு காத்திருக்கிறார்கள் பலர்! தாழிடாத கதவை திறந்து நுழைபவளுக்காக காத்திருக்கிறேன்
வளர்ந்த ஆப்பிள் மரம், கிளையில் பழுத்த பழம், பத்தடி பின்னே!
இறுதி ஊர்வலம், பல்லாயிரக் கணக்கானோர், சாலையில் மிதிபடாத ரோஜா!
வீடு தேடி அலையும் பறவைகள், மதியம் வெட்டப்பட்ட மரம்!

Monday, February 4, 2013

காய்ந்த சருகில் புழுதி மணல், நேற்று பெய்யாத மழை
ஆடி காற்று,
இலைநிழல்களின் நடனம்.
மரமிடையே மின்விளக்கு
பல்கிபெருகி வயிற்றை நிறைத்துவிடுகிறது சென்ற வேலை உணவு விட்டுச் செல்லும் ஒரு துளி பசி!
கையில் ஒட்டிய பட்டாம் பூச்சி சிறகின் நிறம் மலரிலிருந்து அங்கு ஒட்டியிருக்குமோ??
இலை நுனி துளி தரை தொடும் பயணம் நம் வாழ்க்கை!
பலர் விளையாடி
வீசி எறிந்த உணர்ச்சிகளை ஏந்தி கொண்டிருக்கிறேன்.
உடைந்த பொம்மையுடன் விளையாட தயங்குவதில்லை குழந்தைகள்!
ஒரு நொடிதான் என்னை பார்த்திருப்பாய்,
ஓர் யுகமாய் பார்த்து கொண்டிருக்கிறேன் அந்த பார்வையை!

Sunday, January 20, 2013

மழை நீ குளிக்கவும் மற்றவர்கள் நனையவும் பெய்கிறது!
மாலை நேரம்,
பூமேல் பனித்துளி,
அவள் கையில் பூவாளி!
மோர் பானை,
வெயில் காலம்,
தாகத்தில் சிறுவன்!
இரவின் இருளில்,
படர்ந்தது ஒளி.
அலைபேசியில் குறுஞ்செய்தி
கண்ணின் கீழே
மெல்லிய கீறல்,
கண்ணாடியில் முகம்!
எதுவும் பேசாமல்,
இருக்கி அனைத்தான்.
குழந்தை உறங்குகிறது!
நேற்று கனவில்
தூரத்து மணியோசை
அலாரம்!
அறையில் இருட்டு
உடைகள் கலைந்திருக்கின்றன
கட்டிலில் இருவர்!
வெள்ளை துப்பட்டா
துவைத்தாலும் போகாத கறை.
எங்கோ பிடித்திழுத்த சிறுவன்
காய்ந்த சருகில்
புழுதி மணல்,
நேற்று பெய்யாத மழை
ஆடி காற்று
இலைநிழல்களின் நடனம்.
மரமிடையே மின்விளக்கு
மூடபட்ட கசாப்பு கடை
வாசலில் கூடும் நாய்கள்.
எஞ்சியிருக்கும் கோழியிறகு!

Sunday, January 13, 2013

முன் நொடி எந்த அறிகுறியும், மறுநொடி எந்த தடயமும் இல்லா மரணம் வேண்டும்.
என் பசி தீர்க மற்றவர்கள் சமைக்க, நீ சமைந்தாய்!
கனவில் நான் புணரும் இரவுகளில் உள்ளாடை நனைவதாய் புகார் செய்கிறாய்!!
மார்பு தொட்டு காம்பு திருகி, உன் யோனி சுவைத்து என் குறியில் உன் நாவின் ஸ்பரிசம் உணர்ந்தபின் உன்னுள் வர மறுத்தால் நான் கன்னி பையனா??
இரவுபகலாக காத்திருந்தேன்..........விடிந்தது!
ஒருவனுக்குதான் எத்தனை நிழல்கள்?!
முடிந்தால் உன் வேர்வைக்கும் என் எச்சிலுக்கும் வித்தியாசம் கண்டுபிடி...
சலனபடுத்த மனமின்றி கரையமர்கிறேன். சலனமின்றி நீந்திகொண்டிருக்கிறது நிலவு!!
பாலைவனத்தின் நடுவே வந்து சேர்ந்தது இந்த தாள்,வலிகளால் வரிகளை நிறப்ப சொல்லி. காயங்களை கீணி கொண்டிருக்கிறேன் எழுத உதிரம் தேடி